Saturday, 28 November 2009

கன்னித் தமிழ் "பன்னி" தமிழ் ஆகிவிட்டது: கவிக்கோ அப்துல் ரகுமான்

காலைல எழுந்திருச்சி "<brush>" பன்னி,
அப்புறம் <face wash> பன்னி,
அப்புறம் <shave> பன்னி,
அப்புறம் <tiffen> பன்னி,
அப்புறம் <lunch ready> பன்னி,
அப்புறம் <bike start> பன்னி
அப்புறம் <tank fill> பன்னி
அப்புறம் <officela park> பன்னி
அப்புறம் <system on> பன்னி
அப்புறம் <mails check> பன்னி
அப்புறம் <work start> பன்னி ...........
............
இவ்வாறான வரிகளை குறிப்பிட்டு கவிக்கோ கீழ்கண்டவாறு ஒரு பேட்டியில் கூறினார்: கன்னித் தமிழ் "பன்னி" தமிழ் ஆகிவிட்டது ...!!!!

தோழர்களே இவன்றவரை நாம் "பன்னி"யை தவிர்ப்போம் .!! -- ம.பொன்ராஜ்

நாணத்தான் போகிறாய் புத்தா..!

நாணத்தான் போகிறாய் புத்தா..!

அலை அலையாய் தமிழ்க் கூட்டம்

நகர்ந்தது காண்...

எரிமழையாய் ஏவுகணை ஆயுதங்கள்

இடைவிடாமல் தமிழ்ச் சிதைவே

நோக்கமென்று...

ஈழத்தில் இறங்கியது!

சிறுகுழந்தை தாய்மார்கள்

ஈழத்துக் குருவிக் கூட்டம்-

அத்தனையும் ரத்தச் சேற்றில்

ரணப்பட்டு துடித்ததய்யா!

அப்பொழுது...

'பொழுதெல்லாம் அழிவு தரும்

போரென்ற பேரவலம்

தலையிடுங்கள், தடுத்திடுங்கள்'- என

ஈழத்தில் சாக்குரல்

இங்கேயும் கூக்குரல்!

இறுமாப்பு செவிகளுடன்

'தூதர் இதோ போகிறார்

இப்போது போகிறார்' என

தமிழன் வாழ்வில் மண்ணள்ளிப்போட்டு-

மன்மோகன் வாய் மொழிந்தார்.

ஆனால் இப்பொழுது?

தமிழனை அழித்த

சிங்களச் சாத்தான்கள்

தங்களுக்குள் தாக்கிக் கொள்ள... ஐயகோ பொறுக்கவில்லை

காந்தி தேச

கசாப்பு ஆட்சி மனம்!

தமிழனின் உயிர்வலியை

தாங்கவொண்ணா வலிமொழியை

திமிர்விழியால் ரசித்த டெல்லி...

சிங்களனின் கூட்டுக்குள்ளே

சிறு உரசல் என்றவுடன்

பதறித் துடிக்குது பார்...- கொழும்புப்

பயணம் போனது பார்!

புலி வெளியே வருமென்று- உலகம்

காத்திருக்கும் வேளையிலே

தமிழன் மேல் போர்த் தொடுத்த

இந்திய பூனைக்குட்டி

இன்று வெளிவந்ததடா!

கண்டியிடம் பல் துறந்த

பொக்கை வாய் புத்தா!

காலத்தின் பற்களினால்

கயவர்கள் கடிபடுவர்...

காணத்தான் போகிறாய்- கண்மூடி

நாணத்தான் போகிறாய்!


தமிழக அரசியல் வார இதழிலிருந்து

எம் தலைவன் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறான்.

சிங்களனை பாய்ந்து கிழிக்க….

எம் தலைவன் புலியாய்,புயலாய், காற்றாய்
விரைவில் வெளியில் வருவான்.

இந்திய, சிங்கள பொய் மூட்டைகளை பஞ்சு பஞ்சாக்க…
எம் தலைவன் காற்றாய்,தீயாய் ,
பூமியில் இடியாய் இறங்குவான்.

அடேய்! பச்சைப் பொய்க் கூட்டமே!
ஈழத்தாய்களின் கண்ணீர், தாய்ப் பால், இரத்தம்,சாபம் ….
எல்லாம் ஒன்றாய் திரண்டு தான் பிரபாகரனாக மாறி இருக்கிறது.

உங்களின் தலைகளை , இலங்கை மண்ணில் உருளச் செய்யாமல் என் தலைவன் சாகமாட்டான்.
ஆம், துரோகிகளே!
நண்பர்களே!
தோழர்களர்களே!
வீரர்களே!
வெறும் வெற்றுச் சோத்துப் பண்டாரங்களே!
ஏய், உலகத் தமிழ்ச் சாதியே!
இந்த செய்தியை உலக தமிழர் வரலாற்றில் இப்போதே குறித்து வைத்துக் கொள்!
ஈழம் விடுதலை அடைந்த பிறகே எம் தலைவனின் தலை சாயும்…!


--
www.naamtamilar.org

Friday, 27 November 2009

இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

ராமேசுவரம் அருகே உள்ள பிசாசு முனை கடல் பகுதியில், பிளாஸ்டிக் படகில்
இலங்கை மீனவர்கள் 2 பேர், கடல் கொந்தளிப்பால் தத்தளித்தனர். அவர்களை அந்த
பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டு படகு
மீனவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு தங்கள் படகில் வைத்திருந்த
உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.

பின்னர் இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர்கள் மரியன் பிரதீப் (வயது29), ஆல்பர்ட் சலீமா
(31) என்று தெரிய வந்தது. அவர்கள் இலங்கையில் உள்ள பேசாலை என்ற இடத்தை
சேர்ந்தவர்கள். கடலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடல் கொந்தளிப்பில்
சிக்கி 3 நாட்களாக நடுக்கடலில் தவித்ததாக, இலங்கை மீனவர்கள்
தெரிவித்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் 2 பேரும், ராமேசுவரம் போலீஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20514

============

இதைப் பார்த்தாவது ஒவ்வொரு சிங்களவனும், புத்த பிக்குகளும், சிங்கள
கொலைக்கார ராணுவத்தினரும், முதுகெலும்பே இல்லாத இந்திய அதிகார
வர்க்கத்தினரும், உலக பதறுகளும் வெட்கித்தலைகுனியவேண்டும்...

முத்தமிழ்வேந்தன்
சென்னை

Wednesday, 25 November 2009

சொன்னால் முடியாத சரித்திரமாக... என்னால் முடியும் கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு-

2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம்.

பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு.
தலைவரின் புருவம் உயர்கின்றது.

~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? " நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?" தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார்.

மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். ~அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.

எம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.

அண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்?

கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.
அன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க ~அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், "சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்" என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.


மன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.

மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?

இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா? என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.

இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் – அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது – எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.

அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.

அக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.

தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது – அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.


நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் – ~கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்| என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் விய+கம்.

எமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.

ஆனாலும் இனிச் செய்வது என்ன? என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? யார் செய்வது?

அவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.

தலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.

அக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.

1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்;சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.

கொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.

இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். ~என்னால் முடியும் அம்மான்| என்று முன்வந்தான்.

இருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். – யாழ்;தேவி புகையிரதம் – சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.

புகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.

1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.

ஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.

உள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.

சாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் ஆகூழ் உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.

அவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது ஆகூழ் உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.

சந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, 'இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி" என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.

பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்;சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.

கொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.

கொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.

கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.

~வரதன்| சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.

அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.

திட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் – செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.

எங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி! அந்த அரிய வெற்றி!

கொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.

~வீழ்ந்தான் எதிரி, – வென்றான் சாள்ஸ்| என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.

வெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி|.

முதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். ~மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.

கூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு.

இளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.

வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

சாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று.

குடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அப+ர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.

இன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.

வளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.

சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.

எம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.

விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.

அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.

காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.

முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.

வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.

புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.

உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.

எமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.

கரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.

விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.

சாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.

நீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.

இராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா? என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.

அது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.

சாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.

1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.

கொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.

மட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.

மட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.

காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.

கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.

புலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.

~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.

அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி? செய்வாயா? என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.

சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.

நீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.

மன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.

சுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ்.

சாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.

அந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.

தலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.

சாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.

புலனாய்வின் அடிப்படையான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.|

இரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.

சிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.

சமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.

குறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா? சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.

தோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.

கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.

1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.

விடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.

இராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

கட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.

தூரத்தில் இருந்தே விமானங்களை P.முஇ பு.P.ஆ.பு மற்றும் சு.P.புகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். ~என்னால் முடியும்|. P.முஇ சு.P.பு பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.

~பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.

கண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க ~என்னால் முடியும்|. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.

சிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.

இப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.

கண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா? என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.

முழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.

திட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.

எம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.

இதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.

இதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் – பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.

சாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.

~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது.

புலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி!

புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.

அவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.

தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.
சாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.

தனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.

2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். ~என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்| என்று.

இந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.

தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.

ஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.

~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா? முடியாதா? இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.

ஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.

எதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.

புலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.

எதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.

நாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.

சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.

தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர


--
த.தேவா

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்

2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?

வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.


பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?

போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின் ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?

இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)

மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.

பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?

சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,

அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர் இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.

Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)

இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.

இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.

யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.

பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.

கடைசியாக,

கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

- டி.அருள் எழிலன் ( darulezhilan@gmail.com )

Friday, 22 May 2009

பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கை தடுமாறுகிறது, இதன் முகத்திரை கிழிகிறது, இதற்கு கொடி பிடித்த அம்பிமார்கள், துரோகிகள், சிங்கள காடைகளும் மிகுந்த சோகத்தில் மூழ்குகின்றனர், விரைவிலே இவர்களின் அண்ணன் மகிந்த, கோத்த போர்குற்றவாளி கூண்டில் ஏற அமெரிக்கா அனைத்து ஆரம்ப வேலைகளையும் நிறைவு செய்துள்ளது..

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.

பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக இராணுவத்தின் 56-வது படையணி கூறியது.

பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள இராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள இராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் இராணுவம் மீட்கவில்லை.

இராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. இராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் இராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள இராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள இராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.



முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள இராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக இராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை இராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.