விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மீண்டும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையானது நாட்டின் வட பகுதியில் சாட்சியங்கள் இல்லாத ஒரு போரை நடத்திவருவதாக மிலிபாண்ட் வர்ணித்துள்ளார்.
போர் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு, உடனடியாகத் தேவைப்படுகின்ற உதவிப் பொருட்களை அனுப்புவதற்காக ஐ நாவுக்கும் பிற உதவி நிறுவனங்களுக்கும் தடையற்ற அனுமதியை வழங்குமாறு மிலிபாண்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபஷ போர் நிறுத்தம் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தார். இது பற்றி மேற்குலகம் தமக்கு போதனை சொல்லத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment