Sunday, 3 May 2009

தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்!

தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர்.

அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் ப­லியாயின.

அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதிபர் டாட்டாவையே மிரட்டினார் தயாநிதி என்று செய்திகள் வெளிவந்தன. பின்னாளில் அவர் தாத்தாவையும் (கலைஞரையும்) மிரட்டினார்.

சன் டி.வி., ஜெயல­லிதாவின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஜெயா டி.வி.யையும் மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி.யும், சன் நியூஸ் டி.வி.க்கு எதிராக கலைஞர் செய்திகள் டி.வி.யும் உதயமானது. தொடர்ந்து சிரிப்பொ­லி தொடங்கப்பட, அதற்குப் போட்டியாக ஆதித்யா தொடங்கப்பட்டது.

மாறன் குடும்பமும், கலைஞர் குடும்பமும் இனி சேருமா? என்ற ஐயம் எழுந்த வேளையில் அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி மாறன் என்றும் பத்திரிகைச் செய்திகள் வெளியாயின.
பிறகு எப்படி ஒன்று சேர்ந்தார்கள். கலைஞரின் மருமகனும், மாறன் சகோதரர்களின் சித்தப்பாவுமான செல்வம்தான் இதற்கு முயற்சி எடுத்தார் என்று கூறப்பட்டது. உண்மையில் குடும்பத்தை சேர்த்து வைத்தது 'செல்வம்'தான்.

'இதயம் இனித்தது, கண்கள் பனித்தன' என்றார் கலைஞர். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்பிய மத்திய அமைச்சர் பெரம்பலூர் ராஜா மீது 'மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3ஏ நல்ங்ஸ்ரீற்ழ்ன்ம்) ஊழல்' என்ற குற்றச்சாட்டை சன் டி.வி. குழுமம் முன்வைத்தது. அதில் 7 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றும் ஊடகங்கள் அலறின. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஊழ­ல் தற்போதைய உச்சக்கட்ட எல்லை.

தயாநிதி மாறன் தரப்பி­ருந்து '3ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழ­ன் ஆதாரங்கள் அன்றாடம் ஒவ்வொரு படலமாய் வெளிவர, ஒற்றுமையின் அவசியத்தை கலைஞர், அழகிரி அன்னகோ உணர்ந் தது. அதன்பிறகுதான் கலைஞரின் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதனைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை மேற்கொண்டு அம்பலப்படுத்தாமல் சன் டி.வி. அமுக்கியது.

தற்போதைய நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளர் அ. ராசா, ஒரு லட்சம் கோடி ஊழல் செய்ததை அம்பலப்படுத் திய தயாநிதி மாறன், ஊழ­ல் தார்மீக எதிரியா? இல்லை என்கின்ற தயாநிதியின் தடாலடி ஊழல்கள்.

தன் இடத்தில் அமர்ந்து, ஊழ­ல் தன்னை மிஞ்சிவிட்டாரே ராசா என்பதுதான் தயாநிதியின் ஆதங்கம்.

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடி செய்தது. ஊழலைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்தது சி.பி.ஐ. ரிலையன்ஸ் செய்த ஊழ­ன் மதிப்பு 4,500 கோடி ரூபாய் அரசாங்கத் திற்கு இது பெரிய இழப்பு. 500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் அபராதமாகக் கட்டி தப்பித்துவிட்டது.

ரிலையன்சின் தப்புகளை மறைத்து தப்பவைத்தவர் தயாள(?) குணம் படைத்தவர் தயாநிதி மாறன். ரிலையன்சின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரியபோது, தேவையில்லை என்று அம்பானிகள் மீது அன்பு மழைப் பொழிந்தவரும் தயாநிதி மாறன்தான்.
அண்மையில் தயாநிதி மாறனின் ஊழல்கள் குறித்து ஜெயல­லிதா வெளி யிட்ட அறிக்கையும் பேச்சும் நாட்டையே உலுக்கின.

தயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 323 இணைப்புகளைப் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே ஒரு எக்சேஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிநவீன வசதிகளைக் கொண்டது. உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அனுப்புவதற்காக 'பேசிக் ரேட் அக்ஸஸ்' மற்றும் 'பிரைமரி ரேட் அக்ஸஸ்' ஆகிய வசதிகள் அவ்விணைப்புகளில் இருந்தன. அமைச்சர் என்ற முறையில் அமைக்கப் பட்ட இணைப்பகத்தை அதிகார வரம்பு மீறல் செய்து, சன் டி.வி.யோடு ரகசிய மாக இணைத்து, அரசுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தயாநிதி மாறன் ஏற்படுத்தி யதை சி.பி.ஐ. கண்டுபிடித்ததாக ஜெயல­லிதா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

3 comments:

  1. என்னத்த சொல்லி என்னத்த செய்ய...

    ReplyDelete
  2. அதனான் என்னண்ணே, உடனே ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி 3 மணி நேரம் சாப்பிடாமல் தியாகம் செய்து விட்டால் தயாநிதி மாறனின் ஊழல் எல்லாம் உடனடியாக மறந்து போய் விடாதா?

    இப்படி ஊரை அடித்துக் காசு சேர்க்காவிட்டால் எப்படிண்ணே வாழ முடியும்? ஒரு ஓட்டுக்கு 1000, 2000 ரூபாய்ன்னு செலவுபண்ண முடியும்?

    ReplyDelete
  3. BSNL in Vilchicku yar karanam. Ivar amaichar aga iruntha kalathileyum SUN TV iku AIRTEL number thaan.

    ReplyDelete