Wednesday 13 May 2009

மீண்டும் குழம்பி போன சசிக்கு அனானியின் நறுக்

உங்களது முந்தைய பதிவுக்கே பதில் எழுதியாக வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் அதில் பலனிருக்குமா, புரிந்து கொள்வீர்களா என்பது சந்தேகமாக இருந்ததால் எழுதவில்லை.

தற்போது வன்னியிலுள்ள சூழல் ஒப்பிட முடியாததாயினும், வன்னியில் வாழ்ந்து, குண்டு மழைகளிலிருந்து தப்பி வந்தவர்களில் நானும் ஒருவர். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் எல்லாவற்றையும் அனுபவித்த உரிமையில் இதை எழுதத் தோன்றியது.

எத்தனையோ சிங்கள நண்பர்களும் இருந்தனர் (இருக்கிறார்கள் என்று சொல்ல தற்போதைய மனநிலை இடம் கொடுக்கவில்லை). எத்தனையோ நல்ல மனம் படைத்த அந்த சிங்கள நண்பர்களே, தற்போது கொல்லப்படும் அப்பாவித் தமிழர்கள்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், போர் அவசியமானதுதான் என்று சொல்லும்போது எல்லாமே வெறுத்துப் போகின்றது. இனிமேல் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற எண்ணத்தை கொடுக்கிறது. அரசியல்ரீதியாக நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு, அவர்கள் எதையும் தூக்கிக் கொடுக்கப் போவதுமில்லை.

'போதுமடா போராட்டம் என்கின்றீர்கள்', இது போராடும் எண்ணம் உள்ளவர்களையும் சோர்ந்து போகச் செய்யும். அதன் விழைவு 'இலங்கையில் தமிழினம் என்று ஒன்று இருந்தது' என்று வரலாறில் மட்டுமே படிக்க வேண்டிய நிலமைதான் வரும். அப்படி வரலாற்றில் பதிவு செய்ய சிங்களவர்கள் அனுமதிப்பார்களா என்பதே தெரியாது. ஏற்கனவே வரலாற்றை மாற்றி வைத்திருக்கிறார்கள்.

உயிர் வாழ்ந்தால் மட்டும் போதும், அடிமையாகவே இருந்து விடலாம் என்று எண்ணினாலோ, அல்லது ஈழம் என்ற பெயரே அழிந்து ஒழிந்து விடலாம் என்று எண்ணினாலோ மட்டுமே, ஈழப் போராட்டாம் வேண்டாம் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனென்றால், உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களையும் இப்படி எழ்த்துக்கள் சோர்வடையச் செய்து விடலாம். அதனாலே சொல்கின்றேன்.

வன்னியை விட்டு வெளியேறியவர்கள், வெளியேற்றப்ப்பட்டவர்கள், தற்போது எப்படி வாழ்க்கை வாழ்கின்றார்கள்? பொலநறுவையிலிருந்து வந்திருந்த படங்கள் பார்த்த அதிர்ச்சியே இன்னும் தீரவில்லை. உண்மையைச் சொன்னால் அழக்கூட முடியவில்லை. கண்ணீர் வற்றி விட்டது. நீங்களும் அந்தப் படத்தை பார்த்திருக்கக்கூடும். வன்னி மக்களிடம் கேட்க வேண்டும் என்றால், அவர்களுக்கு அடுத்த பக்கத்திலுள்ள பயங்கரம் புரியாமலும் இருக்கலாம். எங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் மக்களை நினைத்தால்.....

ஏதோ உங்களுக்கு தெளிவான ஒரு பின்னூட்டம் எழுதும் எண்ணத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எண்ணங்கள் முட்டி மோதி, உடைந்து சிதறிப் போகின்றது.

ஒன்றே ஒன்று உங்களிடம் சொல்ல வேண்டும். பலரையும் சென்றடையும் கருத்துக்களை எழுதிவரும் நீங்களெல்லாம், இப்படி தயவு செய்து, ஏற்கனவே சூழ்நிலையால் சோர்ந்திருப்பவர்களை, மேலும் சோர்வடையச் செய்து விடாதீர்கள்.


/*

இப்போது இவரது பின்னூட்டங்களில் முண்ணனி வகிப்பது சிங்கள் காடைகளும், குடுமிகளுமே ஒரு மடையன் குடுமி சீமானையே பத்தி கேவலமாக பேசியது, வெத்து வேட்டு என்ற சிங்கள காடை தமிழின துரோக வேலைகளை பலகாலமாக செய்து வருகிறது, இவர்கள் எல்லாம் இப்போது சசியின் நண்பர்கள்.
*/

3 comments:

  1. Poda dubukku

    ReplyDelete
  2. சசியின் எழுத்துக்கள் சோர்வடைய செய்துவிடும் என்று சொல்கின்றீர்கள்.. எத்தனை நாட்களுக்குத் தான் எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பது...

    புலிகள் காரணமேயின்றி என்னைச் சித்திரவதை செய்தால் கூட புலிகள் மேல் பிழை சொல்ல மாட்டேன் என்ற நிலைப்பாட்டிலிருந்தவர்கள் கூட இப்போது மக்களைப் பலவந்தமாக புலிகள் வெளியேறவிடவில்லை என்பதை பிழையாகத் தான் பார்க்க வேண்டிய நிலையாயிருகிறது இன்று.. தினம் தினம் மக்கள் கொத்து கொத்தாக சாகும் போது உள்ளிருக்கும் எல்லோருமே செத்து விடுவார்கள் எனும் நிலையுள்ள போது இன்னமும் "எங்களுக்கு வேண்டும் சுதந்திரம்" என்று சொல்வர்கள் யாருக்கு அந்த சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்?

    புலிகள் இப்போது கவனிக்க வேண்டியது எப்படி மக்கள் அழிவைத் தடுப்பது என்பது தான்.. அதை விடுத்து மக்கள் அழிவுக்கு புலிகளே காரணமாகி விடக் கூடாது..

    மக்களுக்காகத் தான் புலிகளே தவிர புலிகளுக்காக மக்கள் இல்லை..

    சசியின் எழுத்துக்களோடு முற்றுமுழுதாக என்னால் ஒத்துப் போக முடிகிறது மித மிஞ்சிய வருத்தத்துடனும் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமையுடனும்...

    கனவிலும் நினைக்காததெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.. :(

    ReplyDelete
  3. what a joke..the guy who escaped from vanni came to blog to reply to Sasi :)
    wow

    ReplyDelete