Wednesday 20 May 2009

சாட்சியில்லா யுத்தத்தில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கண மக்களின் உடல்களை தடையமின்றி அழிக்கும் முயற்சிகள் ஆரம்பம்? உடன் விரைந்து செயற்பட வேண்டுகோள்

வன்னியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர்.

குறிப்பாக கடந்த இறுதுக் கட்ட நாட்களில் தொடர்ந்த மோதலின் இடையே சிக்கியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தெளிவான தகவல்கள் எவையும் இல்லை.

இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதி கைப்பற்றப்பட்ட போது குறைந்தது 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என அங்கிருந்து எஞ்சியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கு இருந்த மக்கள் பற்றியோ அல்லது கொல்லப்பட்ட காணாமல் போன காயம் அடைந்த படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் குறித்தோ உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என அங்கிருந்து வெளியேறிய பலரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த சாட்சியற்ற கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட இன்னும் கொலை செய்யப்பட உள்ள மக்களின் சடலங்களை அடையாளம் காணமுடியாது அழிப்பதற்கான துரித நடவடிக்கைகள் தற்போது படையினரால் செயற்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் வன்னியில் இருந்து வெளியேறியவர்கள் எஞ்சியிருப்பவர்கள் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் இன்னும் படையினரால் இரகசியமாகக் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் என அனைவரையும் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க சர்வதேச அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் உடனடியாகவே சுயாதின அமைப்புகுக்கள் மனித உரிமை அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இறுதியாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய அரசாங்க அதிகாரிகள், மற்றும் வைத்தியர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து உண்மைத் தகவல்களை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுயாதீன அமைப்புக்கள் பெற்றுக் கொள்ள வளியேற்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment