வாழ்த்துகள் ரமேஷ், இப்படி ஒரு தந்தை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாகும். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, இலஞ்சியை சேர்ந்த மாணவர் ரமேஷ் தமிழை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். குளறுபடி இல்லாத தேர்வு, எளிதான வினாத்தாள்கள், பதட்டம் இல்லாமல் தேர்வெழுதுவதற்காக கூடுதலாக 15 நிமிடம் வழங்கியது போன்ற காரணங்களால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.4 % குறைந்துள்ளது .
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறரை லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தேர்வு முடிவு, இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
முதலிடம் பிடித்த மாணவர் ரமேஷ் பேட்டி : பொழுதுபோக்கு விஷயங்களை ஒதுக்கிவைத்து விட்டு படித்ததால் மாநில முதலிடம் பெற முடிந்தது என இலஞ்சி மாணவர் ரமேஷ் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அங்குள்ள சர்வோதய சங்கத்தில் மேலாளராக பணிபுரிகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் ரமேஷ், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேறியுள்ளார். குற்றாலம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் படித்த இவர் தமிழில் 195, ஆங்கிலத்தில் 189, இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றில் 200 மதிப்பெண்களும் வேதியியலில் 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து மாணவர் கூறுகையில், சுமாரானதுதான் எங்கள் குடும்பம். அம்மா ஜெயலட்சுமி இல்லத்தரசி. எனது மூத்த சகோதரிகள் செண்பகாதேவி பி.இ.,படிப்பும், மகேஸ்வரி ஆசிரியை பயிற்சியும் படித்துள்ளனர். எங்கள் பள்ளி முதல்வர் காந்திமதி, தாளாளர் மோகனகிருஷ்ணன், ஆசிரியர்களின் ஊக்கம்தான் இத்தகைய வெற்றிக்கு காரணம். நான் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது என் பெற்றோரின் கனவு. என்படிப்பிற்காக புளியங்குடியில் இருந்து குடிபெயர்ந்து குற்றாலம் மேலகரத்தில் வாடகை வீட்டில் குடியேறினோம்.என் தந்தைதான் தினமும் வேலைக்கு புளியங்குடிசென்றுவந்தார். எனக்காக என் தந்தை சிரமப்படுவதை பார்த்து பெற்றோரின் கனவான மாநில ரேங்க் பெற வேண்டும் என ஆசைப்பட்டு படித்தேன்.
எனக்கு பயாலஜிதான் சிரமமாக இருந்தது. எனவே அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பேன். எங்கள் வகுப்பில் அன்றைய பாடங்களை அன்றே தெளிவாக புரிந்துகொண்டுபடித்துவிடுவோம். அடிக்கடி தேர்வுகள் எழுதுவோம். இரவு அதிகபட்சம் 10.30 மணிவரைதான் படிப்பேன். படிப்பிற்காக டியூசன் செல்லவில்லை. வீட்டில் டிவியோ கேபிள்டிவி கனெக்சனோ கிடையாது. புத்தகம் வாசிப்பதிலும், கீபோர்டு இசைப்பதிலும் ஆர்வம் உண்டு. இருப்பினும் படிப்பிற்காக அவற்றையும் ஒதுக்கிவைத்திருந்தேன். டாக்டராக ஆசை. குறிப்பாக "ஸ்டெம்செல்' எனப்படும் மருத்துவ துறையில் உயர்கல்வி பயில ஆர்வமாக உள்ளேன். சென்னை மருத்துவகல்லூரியில் சேர்ந்து பயில்வேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Touching!
ReplyDelete