Tuesday, 12 May 2009

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பெரியார் தி.க.வின் குறுவட்டுக்களை ஒளிபரப்ப நீதிமன்றம் அனுமதி

கருணாநிதியின் பித்தலாட்டம் இப்போது கோர்ட் மூலம் வெளிப்படுகிறது, சீமானை பிடிச்சி, சிடியை பிடிச்சி என்ன நடந்தது. இல்ல மின் தடை யாரும் சிடியை பார்க்க கூடாதாம். ஒரு சீட் கூட இந்த கொலைகார கூட்டணிக்கு கிடைக்க போவதில்லை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்
வரவேற்றிருக்கின்றனர்.

இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.

மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று 'மக்கள்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டது.

No comments:

Post a Comment