Wednesday 6 May 2009

மீண்டும் கருணாநிதி பொய்பிரச்சாரம், சோனியா தமிழகம் வந்தார்

06-05-2009 அன்று திட்டமிட்டபடி சோனியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்தல் பொய்ப் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்து கருணாநிதியுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக தி மு க வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதி அவர்களின் உண்ணா நோன்புக்குப் பிறகு ஈழத்தில் சிங்கள ராஜபக்ச அரசு செய்த யுத்த நிறுத்தம் அமுலில் இருப்பதாலும் அங்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் சோனியா - கருணாநிதி அவர்களின் இன்றைய சந்திப்பு மிகவும் நெருக்கமாக இருந்ததாக சன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

அதுமட்டுமன்றி சோனியா அன்னை தீவுத்திடலில் பிரச்சார மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை மேலும் குசிப்படுத்த குஸ்பு அவர்களை நடுவராகக் கொண்ட மானாட மயிலாட நிகழ்ச்சி போன்று கலாநிதி மாறனை நடுவராகக் கொண்டு ஜெயா ஆட.. ராமதாஸ் ஆட நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் மெய் மறந்து சோனியா அன்னையும் சேலை கழன்று விழுவது கூடத் தெரியாமல் அரசியல் குத்தாட்டம் ஆடியதாகவும் கலைஞர் தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு தெரியப்படுத்தியது.

ஆனால் சர்வதேச செய்தி ஊடகங்களோ சோனியா அம்மையார் இன்று தமிழகத்துக்கு செய்ய இருந்த விஜயத்தை தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போட்டு விட்டது உண்மைதான் என்று தெரிவிக்கின்றன.

ஓஓ.. ஈழத்தில் தமிழன் சாகச் சாக.. யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கிறது என்று பொய் பிரச்சாரம் செய்தது போல.. கலைஞர் குடும்பம்.. இது விடயமாகவும் கதையளந்திட்டாங்க போல.. பழக்க தோசத்தில...!

தி.மு.க, சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட தவறான செய்திகளை இங்கு இட்டதற்கு வருந்துகின்றோம். எப்படி சோனியாவின் வரவு இன்று தமிழகத்தில் நிகழவில்லையோ அப்படியே ஈழத்திலும் இன்னும் போர் ஓயவும் இல்லை கனக ரக ஆயுதங்களின் விமானக் குண்டு வீச்சுக்களின் பாவனையும் ஓயவில்லை.

ஈழத்தில் வன்னியில் 05-05-2009 அன்றும் விமானங்கள் மூலமும் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மூலமும் எரிகுண்டுகள் வீசி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் பல தமிழ் மக்கள் எரிந்து உடல்கருகி மாண்டுள்ளனர். ஆனால் தி.மு.க தலைவரோ ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக வழமை போன்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment